TNPSC Thervupettagam

கடல்வழி ஏவுகல உந்துகலன் மீட்பு அமைப்பு

July 18 , 2026 10 days 89 0
  • Long March 10B ஏவுகலத்தைப் பயன்படுத்தி, கடல்வழி மறுபயன்பாட்டு ஏவுகல உந்து கலன் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
  • நிலை பிரிப்பிற்குப் பிறகு, உந்துகலன் செங்குத்தாகத் திரும்பி, வலை அடிப்படையில் ஆன தரையிறங்கும் அமைப்பைப் பயன்படுத்தி கடலோரத் தளத்தில் மீட்கப் பட்டது.
  • இது சுற்றுப்பாதை அளவிலான ஏவுகல உந்துகலனை சீனா வெற்றிகரமாக மீட்ட முதல் நிகழ்வாகும்.
  • சீன ஏவு வாகனத் தொழில்நுட்பக் கழகம் (CALT) உருவாக்கியுள்ள இந்த Long March 10B  ஏவுகலம், 16 டன்களுக்கும் அதிகமான சுமைகளை தாழ்வான புவி சுற்றுப்பாதைக்கு (LEO) கொண்டு செல்லும் திறன் கொண்டது.
  • மறுபயன்பாட்டு ஏவுகலத் தொழில்நுட்பமானது, ஏவுதல் செலவுகளைக் குறைப்பதையும், சீனாவின் எதிர்கால வணிக ரீதியான செயற்கைக்கோள் மற்றும் நிலவுப் பயணங்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்