தமிழ்நாடு அரசானது, சென்னை வனவிலங்குப் பிரிவின் கீழ் தனது இரண்டாவது கடல் சார் மேல்நிலைப் படைப் பிரிவை அமைக்க உள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க இராமநாதபுரத்தில் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதல் பிரிவு நிறுவப் பட்டது.
சென்னை கடற்கரையில், குறிப்பாக நீலாங்கரை மற்றும் மெரினா ஆகிய ஆமைகள் வலையமைக்கும் இடங்களுக்கு இடையில் அருகி வரும் சிற்றாமை/ஆலிவ் ரெட்லே ஆமைகளைப் பாதுகாப்பதில் இந்தப் புதிய பிரிவு கவனம் செலுத்தும்.
கடல்சார் மேல்நிலைப் படைப் பிரிவானது கடற்கரையிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்குள், அங்கு நிலவும் அச்சுறுத்தல்களைக் குறைக்க ரோந்து சென்று, சட்டங்களை அமல்படுத்தும் மற்றும் அந்த நிறுவனங்களுடன் பல ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தினை அமல்படுத்துவதற்கு இந்தப் படை ஆதரவளிக்கும்.
இது தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழு, இந்தியக் கடலோரக் காவல்படை, மீன்வளத் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மீனவர் சங்கங்களுடன் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.