கடல் சார் பொருளாதாரம் பற்றிய IUCN அமைப்பின் அறிக்கை
April 30 , 2024 380 days 345 0
IUCN அமைப்பானது, "ஒரு மீளுருவாக்கம் மிக்க கடல்சார் பொருளாதாரத்தை நோக்கி – கடல்சார் பொருளாதாரத்தை வடிவமைத்தல்" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது ஒரு மீளுருவாக்கம் மிக்க கடல்சார் பொருளாதாரத்திற்கான (RBE) வரையறை மற்றும் கொள்கைகளை முன்மொழிந்துள்ளது.
RBE மாதிரியானது, நிலையான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நியாயமான செழுமையுடன் கூடிய, பெருங்கடல் சூழல் அமைப்புகளின் பயனுள்ள மீளுருவாக்கம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பெருங்கடல் சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் மீள் தன்மை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு, உள்ளடக்கம், நேர்மை மற்றும் பழங் குடியினர் உரிமைகள் மற்றும் சூழலமைப்பு வளங்காப்பிற்கு பெருமளவு முன்னுரிமை அளிக்கிறது.
இது கார்பன் உமிழ்வுக் குறைப்பிற்காக எண்ணெய் பிரித்தெடுத்தல் மற்றும் ஆழ்கடல் சுரங்க நடவடிக்கை போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்கிறது.