TNPSC Thervupettagam

கடல் சார் NDC சவால்

November 23 , 2025 4 days 27 0
  • பிரான்சு, பிரேசில், பெல்ஜியம், கனடா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பதினேழு நாடுகள் COP30 மாநாட்டில் கடல் சார் (தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்) சவாலில் இணைந்தன.
  • இந்த முன்னெடுப்பு பாரிசு உடன்படிக்கையின் கீழ் தேசியப் பருவநிலை திட்டங்களில் பெருங்கடல் சார்ந்த பருவநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
  • பிரான்சு மற்றும் பிரேசிலால் ஆதரிக்கப்படும் ஒரு பெருங்கடல் செயற்குழு, 2030 ஆம் ஆண்டு பருவநிலை இலக்குகளில் கடல் சார் தீர்வுகளை ஒருங்கிணைக்க அரசாங்கங்களுக்கு உதவுகிறது.
  • கடல் சார் நடவடிக்கை தொகுப்பு பெருங்கடல் பாதுகாப்பு, பெருங்கடல் உணவு அமைப்புகள், கடல் சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கப்பல் போக்குவரத்து கார்பன் நீக்கம் மற்றும் கடலோரச் சுற்றுலா ஆகிய ஐந்து துறைகளில் கவனம் செலுத்துகிறது.
  • 1.5°C வெப்பநிலை இலக்குக்குத் தேவையான உலகளாவிய உமிழ்வுக் குறைப்புகளில் 35% வரை பெருங்கடல்கள் வழங்க முடியும்.
  • இந்த முன்னெடுப்பு சதுப்புநிலங்கள், கடல்புற்கள் மற்றும் உப்புத் தன்மை கொண்ட சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட கடல் சார் கார்பன் தடங்களை ஊக்குவிக்கிறது என்பதோடு மேலும் கடல் சார் பருவநிலை நிதியில் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்