TNPSC Thervupettagam

கடல் மீன்வளம் மீதான தேசியக் கொள்கை, 2017

August 7 , 2021 1464 days 579 0
  • இந்திய நீர்நிலைகளில் கடல்மீன் பிடித்தலை ஊக்குவிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு கடல் மீன்வளம் மீதான தேசியக் கொள்கையினை (National Policy on Marine Fisheries – NPMF) அரசு அறிவித்துள்ளது.
  • நீலப் புரட்சியை ஊக்குவிப்பதில் ஈடுபாடு செலுத்தும் நீல வளர்ச்சி முன்னெடுப்பினை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலை NPMF வழங்கும்.
  • இந்தியாவின் தற்கால மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் நன்மைக்காக நிலையான மீன்பிடி முறை மூலம் இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தின் கடல்வாழ் வளங்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டினை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • NPMF கொள்கையின் உத்திகளானது 7 தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
  • அவை நிலையான மேம்பாடு, மீனவர்களின் சமூக-பொருளாதார மேம்பாடு, துணை நிறுவனங்களிடையே கொள்கை, கூட்டிணைவு, தலைமுறைகளுக்கிடையேயான சமத்துவம், பாலின நீதி மற்றும் முன்னெச்சரிக்கைமிக்க அணுகுமுறை ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்