TNPSC Thervupettagam

கடவுக் குறியீடு கொண்டு காக்கப்பட்ட மூளை தரவுகள்

August 21 , 2025 16 hrs 0 min 14 0
  • அமெரிக்காவின் ஸ்டான்போர்டு அறிவியலாளர்கள், பயனர்கள் முன்னமைக்கப்பட்ட கடவுக் குறியீட்டினைப் பற்றி நினைக்கும் போது மட்டுமே செயல்படுத்தப்படுகின்ற ஒரு மூளை-கணினி இடைமுகத்தினை (BCI) உருவாக்கியுள்ளனர்.
  • BCI ஆனது, மூளை சமிக்ஞைகளில் பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்திப் பயனர்கள் கற்பனை செய்யும் வாக்கியங்களை (உள்ளகப் பேச்சை) மறுகுறியாக்கம் செய்து உரை அல்லது ஒலியாக மாற்றுகிறது.
  • உள்ளகப் பேச்சு பலவீனமான சமிக்ஞைகளை உருவாக்கினாலும், இது பேசப்படும் மற்றும் கற்பனை செய்யப்படும் பேச்சு ஆகிய இரண்டும் உருவாகின்ற பெருமூளைப் புறணியில் இருந்து வரும் சமிக்ஞைகளில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த அமைப்பு ஆனது கற்பனை செய்யப்பட்ட வாக்கியங்களில் 74 சதவீதத்தினை சரியாகக் காட்டியது மற்றும் "Chitty-Chitty-Bang-Bang" என்ற சிந்தனை சார்ந்த கடவுக் குறியீட்டினை 98% துல்லியத்துடன் அடையாளம் கண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்