கடவுச்சீட்டு குடியுரிமைக்கான சான்றல்ல: வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்
June 27 , 2026 89 days 176 0
கடவுச்சீட்டு என்பது இந்தியக் குடியுரிமைக்கான சான்றல்ல என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெளிவுபடுத்தியுள்ளதுடன், தனது நீண்டகால சட்டப்பூர்வ நிலைப் பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடவுச்சீட்டு சட்டம், 1967ன் படி, கடவுச்சீட்டு என்பது ஒரு பயண ஆவணமாகவே வழங்கப் படுகிறதே தவிர, குடியுரிமைக்கான ஒரு உறுதியான சான்றாக அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சட்டம் பயண ஆவணங்களையும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதையும் ஒழுங்குபடுத்துவதால், குடியுரிமை நிலை திட்டவட்டமாக இல்லாத சில சந்தர்ப்பங்களில்கூட கடவுச்சீட்டுகளை வழங்க அனுமதிக்கிறது.
பம்பாய் உயர் நீதிமன்றம் (2013 தீர்ப்புகள்) உள்ளிட்ட நீதிமன்றங்கள், கடவுச்சீட்டை வைத்திருப்பதை குடியுரிமையின் இறுதிச் சான்றாகக் கருத முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளன.
குடியுரிமையானது குடியுரிமைச் சட்டம், 1955-இன் கீழ் தனியாக நிர்வகிக்கப்படுகிறது; அதே நேரத்தில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மற்றும் குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களும் குடியுரிமைக்கான உறுதியான சான்றாகப் பயன்படாது.