TNPSC Thervupettagam

கடவுச்சீட்டு சேவை தினம் 2026 – ஜூன் 24

June 27 , 2026 13 hrs 0 min 9 0
  • இந்தியாவில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான சட்டபூர்வ அடிப்படையை உருவாக்கிய கடவுச்சீட்டுகள் சட்டம், 1967 இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • கடவுச்சீட்டு சேவை திட்டம் பதிப்பு 2.0 மூலம் மின்னணு-கடவுச்சீட்டுகள், அலைபேசி கடவுச்சீட்டு சேவை வாகனங்கள், கடவுச்சீட்டு சேவை மையங்கள் (PSKs) மற்றும் தபால் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையங்கள் (POPSKs) ஆகியவற்றின் மூலம் கடவுச்சீட்டு சேவைகளை மேம்படுத்தியுள்ளது.
  • கடவுச்சீட்டு சேவை வலையமைப்பானது 2014 ஆம் ஆண்டில் 77 கடவுச்சீட்டு சேவை மையங்களில் இருந்து தற்போது நாடு முழுவதும் 545 கடவுச்சீட்டு சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையங்களாக விரிவடைந்துள்ளது.
  • இந்தியா முழுவதும் கடவுச்சீட்டு சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களின் பங்களிப்பை இந்நாள் அங்கீகரிக்கிறது.
  • திறமையான, பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட கடவுச்சீட்டு சேவைகளை வழங்குவதில் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்