இந்தச் சிகிச்சையானது, ANGPTL3 (ஆஞ்சியோபொய்டின் போன்ற 3) மரபணுவை இலக்காக வைத்து, இரத்தத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரதம் (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.
கொழுப்பு என்பது இரத்தத்தில் உள்ள கொழுப்பு போன்ற பொருள் ஆகும்.
அதிக அளவு LDL (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரதம்) ஆனது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதோடுமேலும் அதிக ட்ரைகிளிசரைடுகள் இருதய நோய் சார்ந்த ஆபத்தையும் அதிகரிக்கின்றன.
15 நோயாளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு மருந்தானது LDL கொழுப்பை 50% என்றும் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை 55% என்றும் குறைத்தது.
இந்த அணுகுமுறை, இயற்கையாகவே செயலற்ற ANGPTL3 மரபணுக்கள் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள் இல்லாமல் குறைந்த அளவு கொழுப்பைக் கொண்ட 250 பேரில் ஒருவருக்கு ஏற்படும் அரிய இயற்கைப் பிறழ்வு முறையை கொண்டு உருவாக்கப் பட்டு உள்ளது.
இந்தச் சிகிச்சையானது, கொழுப்பு மேலாண்மையின் முக்கியத் தளமான கல்லீரல் செல்களை மாற்றியமைக்க CRISPR-Cas9 மரபணு திருத்தத்தைப் பயன்படுத்துகிறது.