தமிழ்நாடு அரசானது, அனைத்துக் கடைகளும் நிறுவனங்களும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதித்துள்ளது.
இந்த விதியானது, சமீபத்தில் 2025 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசானது, 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (ஸ்தாபனங்கள்) சட்டத்தில் திருத்தம் செய்து இது தொடர்பாக அதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இது சுமார் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சட்டத்தின் சில பிரிவுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது.