கட்டணத் தடைகள் மற்றும் கட்டணமற்ற தடைகள் மீதான அறிக்கை
May 12 , 2026 152 days 334 0
ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, “Invisible Barriers: The Costs of Non-Tariff Measures” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான நாடுகளுக்குச் சாதாரண இறக்குமதி வரிகளை விட, கட்டணமற்ற தடைகளே (NTMs) அதிகப் பொருளாதாரச் செலவை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
கட்டணமற்ற தடைகள் (NTMs) என்பது வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத் தரநிலைகள், தரச் சோதனைகள், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சான்றிதழ் தேவைகள் போன்ற விதிகளைக் குறிக்கும்.
சுமார் 88% நாடுகளில் சாதாரண வரி விதிப்புகளை விட, இந்த NTMs தடைகளே அதிக ஏற்றுமதிச் செலவை ஏற்படுத்துவதாக அறிக்கை கூறுகிறது.
வளர்ந்து வரும் நாடுகள், வரி விதிப்புகள் மற்றும் சிக்கலான வர்த்தக விதி முறைகளைப் பின்பற்றுவதற்கான அதிகச் செலவு என இரட்டைச் சுமையை எதிர் கொள்கின்றன.
குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (LDCs), போதிய சோதனை வசதிகள் மற்றும் சான்றிதழ் முறைகள் இல்லாததால், G20 நாடுகளுக்கான தங்களது ஏற்றுமதியில் சுமார் 10%-ஐ இழக்கின்றன.
உலகளாவிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இப்போது வெறும் வரிக் குறைப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஒழுங்குமுறை எளிமைப்படுத்தலில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.