கட்டிடங்களுடன் இணைந்த சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி தகடுகள்
June 9 , 2025 77 days 142 0
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திய நிலவரப்படி, இந்தியா மேற்கூரைசார் சூரிய சக்தி உற்பத்தி அமைப்புகளில் 17 ஜிகா வாட்டிற்கும் அதிகமான திறனை நிறுவியுள்ளது.
கட்டிட ஒருங்கிணைப்பு சார் ஒளிமின்னழுத்த விளைவு (Building-Integrated Photovoltaics -BIPV) ஆனது சூரிய சக்தி உற்பத்தி தகடுகளை நேரடியாக கட்டிடக்கலைக் கூறுகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் முழு கட்டிடங்களையும் மின் உற்பத்தி அமைப்புகளாக மாற்ற முடியும்.
இது மின்சாரத்தை உருவாக்குதல் மற்றும் ஒரு கட்டிடத்தின் கட்டமைப்புப் பகுதியாக செயல்படுதல் போன்ற இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு ஆனது கட்டிடங்கள் அவற்றின் அழகியல் கூறுகளைப் பேணும் அதே வேளையில் தூய்மையான ஆற்றலை உருவாக்க அனுமதிக்கிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 300 GW சூரிய சக்தித் திறனை நிறுவ இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.