கட்டுமான நடவடிக்கைகளுக்குத் தடை - பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
September 30 , 2025 67 days 144 0
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமான நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (NGT) உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திற்குள் குப்பை கொட்டுதல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்த ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தினால் தானாக முன்வந்து இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டது.
சதுப்பு நில எல்லையிலிருந்து 246 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரும்பாக்கம் கிராமம் பாதிக்கப்பட்ட இடமாக அடையாளம் காணப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆனது 2022 ஆம் ஆண்டில் ராம்சர் தளமாக அறிவிக்கப் பட்டது மற்றும் வெள்ளப் பாதிப்புத் தணிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் (TNSWA) ஆனது தற்காலிகமாக நிலப்பரப்பியல் மற்றும் நீர்நிலையியல் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு கிலோமீட்டர் இடையக மண்டலத்தினை நிர்ணயித்துள்ளது.