கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்விற்கான சர்வதேச தினம் - ஏப்ரல் 04
April 8 , 2023 889 days 298 0
இது வெடிக்கும் அபாயங்கள் உள்ள கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றை ஒழிப்பதற்கான உதவிகளை ஒன்று திரட்டுதல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கண்ணி வெடிகள் நடவடிக்கைச் சமூகம் ஆனது கண்ணி வெடிகளுக்கு எதிராக நிர்ணயிக்கப் பட்ட இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கிறது.
இது ஐக்கிய நாடுகளின் கண்ணி வெடிகளுக்கு எதிரான நடவடிக்கைச் சேவை (UNMAS) தலைமையில் வழி நடத்தப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Mine Action Cannot Wait" என்பதாகும்.
1997 ஆம் ஆண்டில், மனிதர்களுக்கு எதிரான கண்ணி வெடிகள் தடைச் சட்டம் நிறுவப் பட்டது.
இது கண்ணி வெடிகளுக்கு எதிரான முதல் பிரச்சாரத்தினை முன்வைத்தது.
மேலும், அதைத் தொடர்ந்து 164 நாடுகள் அதனை அங்கீகரித்துள்ளன.