கண் பார்வையற்ற முதலாவது பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி
October 15 , 2019 2121 days 788 0
இந்தியாவின் முதலாவது கண் பார்வையற்ற பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரஞ்சல் பாட்டீல் என்பவர் திருவனந்தபுரத்தின் துணை ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் அவர் இந்திய ஆட்சிப் பணியில் நியமிக்கப்பட்ட பின்னர் இது அவருக்குக் கிடைத்த இரண்டாவது பணியாகும்.
2008 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்த கிருஷ்ண கோபால் திவாரி என்பவர் கண் பார்வையற்ற முதலாவது இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.