TNPSC Thervupettagam

கதிர்வீச்சு எதிர்ப்பு மருந்து

October 23 , 2025 13 days 66 0
  • சீசியம்-137 மாசுபாட்டை குணப்படுத்துவதற்காக இந்தியா இந்தோனேசியாவிற்கு பிரஷ்யன் ப்ளூ மருந்துகளைப் பரிசளித்தது.
  • இந்தோனேசியாவின் சுகாதார அமைச்சகத்தின் அவசர கோரிக்கையின் பேரில் இந்த மருந்துகள் அனுப்பப்பட்டன.
  • ஜகார்த்தாவில் உள்ள இந்தியத் தூதரகம் மருந்துகளின் விரைவான போக்குவரத்திற்கு உதவியது.
  • அணுசக்தி அல்லது கதிரியக்க அவசரநிலைகளுக்கு இந்தோனேசியாவின் எதிர் நடவடிக்கைக்கு இந்த உதவி துணைபுரிகிறது.
  • சீசியம்-137 என்பது உடனடியாக சிகிச்சையளிக்கப் படாவிட்டால் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்ற ஒரு கதிரியக்க ஐசோடோப்பாகும்.
  • பிரஷ்யன் ப்ளூ கதிரியக்க சீசியம்-137 ஐசோடோப்பினை உடலில் பிணைத்து அதை அகற்ற உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்