மாசகான் கப்பல் கட்டும் நிறுவனமானது மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இரண்டாவது ஸ்கார்பியன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலான “ஐஎன்எஸ் கந்தேரியை” இந்திய கடற் படைக்கு வழங்கியது.
முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பலானது செப்டம்பர் 28 அன்று கடற்படைத் தளத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் இந்திய கடற்படையில் இணைக்கப்பட இருக்கின்றது.
பரந்த இந்தியப் பெருங்கடலில் உள்ள கொடிய கடல் இரைபிடித்துண்ணியான பெரிய முகம் கொண்ட சா மீனின் நினைவாக இந்த நீர்மூழ்கி கப்பலுக்குக் ‘கந்தேரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலின் முந்தையப் பதிப்பானது இந்தியக் கடற்படையில் 1968 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலக்கப்பட்டது.
தொழில்நுட்பப் பங்காளர்
மாசகான் கப்பல் கட்டும் நிறுவனமானது பிரான்சு கடற்படைக் குழுவுடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தின் கீழ் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குகின்றது.