ஸ்ரீநகரில் உள்ள 15வது படைப் பிரிவின் முன்னாள் தளபதியான கன்வால் ஜீத் சிங் தில்லான் என்பவர் மத்தியப் பாதுகாப்புத் துறையில் முப்படைத் தலைமைத் தளபதியின் (Chief of Defence Staff - CDS) கீழ் உள்ள பாதுகாப்புப்புலனாய்வுத் துறையின் பொது இயக்குநராகவும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகளின் (புலனாய்வு) துறைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.
பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு என்பது இந்திய ஆயுதப் படைகளுக்கு இராணுவ உளவு சார்ந்த தகவல்களை வழங்குவதற்கும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பான ஒரு அமைப்பாகும்.
இது 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது. இது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றது.