TNPSC Thervupettagam

கபாஸ் கிராந்தி திட்டம்

October 24 , 2025 20 days 83 0
  • மத்திய அரசானது அதிக மகசூல் தரும், நீண்ட காலப் பருத்திச் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள கபாஸ் கிராந்தி திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • விவசாயிகளுக்கான அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் விரிவாக்கச் சேவைகளில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • மகாராஷ்டிராவின் அகோலா பகுதியில் உள்ள விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்க அதிக அடர்த்தியிலான தோட்டப் பயிர் (HDP) விளைச்சல் முறைகளை வெற்றிகரமாக ஏற்று பின்பற்றியுள்ளனர்.
  • தெலுங்கானா விவசாயிகள் HDP நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், அதன் ஏற்பிற்கு ஏற்ற விதைகளைப் பெறவும் மகாராஷ்டிராவிற்கு வருகை தருவர்.
  • தெலுங்கானாவில் சுமார் 24 லட்சம் விவசாயிகள் பருத்தியை பயிரிடுவதுடன், அந்த மாநிலம் இந்தியாவின் முன்னணி பருத்தி உற்பத்தியாளராக மாறுகிறது.
  • தீபாவளிக்குப் பிறகு நேர ஒதுக்கீட்டு முன்பதிவு மற்றும் பருத்தி விற்பனையை நெறிப்படுத்த கபாஸ் கிசான் செயலி என்ற கைபேசிச் செயலி தொடங்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்