பனி யுக சாம்பல் ஓநாய்க்குட்டியின் வயிற்றில் காணப்பட்ட செரிக்கப்படாத இறைச்சியிலிருந்து கம்பளி காண்டாமிருகத்தின் மரபணுவை அறிவியலாளர்கள் மீட்டனர்.
சுமார் 14,400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த ஓநாய்க்குட்டி, வடகிழக்கு சைபீரியாவின் டுமாட் கிராமத்திற்கு அருகிலுள்ள நிரந்தர உறைபனியில் பாதுகாக்கப் பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கம்பளி காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அழிவின் விளிம்பினை எட்டும் வரை மரபணு ரீதியாக வளம் மிக்கதாக இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் இனவிருத்திக்கான எந்த அறிகுறிகளையும் கண்டறியவில்லை, இது விரைவான எண்ணிக்கை சரிவைக் குறிக்கிறது.
ஆய்வின்படி, இந்த அழிவு முக்கியமாக பனி யுகத்தின் இறுதியில் பருவநிலை வெப்ப மயமாதலுடன் தொடர்புடையது.