கம்போடியாவில் உள்ள மூன்று இனப் படுகொலை காலச் சித்திரவதை மற்றும் மரண தண்டனை தளங்களை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது.
பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் 47வது அமர்வின் போது இந்தச் சேர்ப்பு அறிவிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டில் கெமர் ரூஜ் கட்சி ஆட்சிக்கு வந்ததன் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.
மூன்று தளங்களில் டுவோல் ஸ்லெங் இனப்படுகொலை அருங்காட்சியகம், கம்போங் ச்னாங் மாகாணத்தில் உள்ள M-13 சிறைச்சாலை மற்றும் புனோம் பென்னுக்கு அருகில் உள்ள சோயுங் எக் கொலைக் களம் ஆகியவை அடங்கும்.
முன்னர் உயர்நிலைப் பள்ளியாக இருந்த துவோல் ஸ்லெங், 15,000 க்கும் மேற்பட்டோர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட S-21 சிறைச் சாலையாகப் பயன்படுத்தப் பட்டது.
இதில் M-13 சிறைச்சாலை மத்திய கம்போடியாவில் உள்ள ஆரம்பகால கெமர் ரூஜ் சித்திரவதை மையங்களில் ஒன்றாக செயல்பட்டது.
சோயுங் எக் ஒரு மாபெரும் மரண தண்டனை தளமாக இருந்தது.
கெமர் ரூஜ் இனப் படுகொலையானது 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பட்டினி, சித்திரவதை மற்றும் மரண தண்டனை மூலம் சுமார் 1.7 மில்லியன் மக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.
யுனெஸ்கோ பட்டியலில் முன்னதாக அங்கோர், பிரியா விஹியர், சம்போ பிரியா குக் மற்றும் கோ கெர் ஆகிய நான்கு கம்போடிய தொல்பொருள் தளங்கள் இடம் பெற்று உள்ளன.