TNPSC Thervupettagam

கரஹான் டெபே - 11,000 ஆண்டுகள் பழமையான தளம்

December 8 , 2025 4 days 47 0
  • கரஹான் டெபே என்பது தென்கிழக்கு துர்கியேயின் சான்லியுர்ஃபா மாகாணத்தில், கோபெக்லி டெப்பேவின் நன்கு அறியப்பட்ட தளத்திற்கு அருகில் அமைந்துள்ள 11,000 ஆண்டுகள் பழமையான மட்பாண்டக் காலத்திற்கு முந்தைய புதிய கற்காலத் தளம் ஆகும்.
  • இது தாஸ் டெப்பலர் (கல் மலைகள்) குழுவின் ஒரு பகுதியாகும்.
  • டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் ஒரு சுண்ணக்கல் பீடபூமியில் கிமு 9400 முதல் 8000 ஆம் ஆண்டு வரையில் இங்கு மக்கள் வசித்தனர்.
  • இந்தத் தளத்தில் ஆரம்பகாலக் குடியிருப்புக் கட்டமைப்புகள், ஈமச்சடங்குத் தாழிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக நடவடிக்கைகளைக் காட்டும் T-வடிவ ஒற்றைக் கல் சிற்பங்கள் உள்ளன.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் முதல் மனித முகம் கொண்ட T-வடிவ தூணையும், செதுக்கப்பட்ட மனித முகங்கள், தைக்கப்பட்ட உதடுகளைக் கொண்ட சிலைகள், செர்பென்டைன் மணிகள் மற்றும் கலப்பின விலங்கு-மனிதச் சிற்பங்களையும் கண்டறிந்தனர்.
  • கரஹான் டெப்பேவில் செதுக்கப்பட்ட கைகள், கைகள், பட்டைகள், ரோம ஆடைகள் மற்றும் 2.3 மீட்டர் உயரமுள்ள ஆண் சிலையுடன் கூடிய மானுடவியல் சார் தூண்களும் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்