TNPSC Thervupettagam

கருணைக் கொலை வழக்கு

March 13 , 2026 5 days 105 0
  • 2013 ஆம் ஆண்டு முதல் மூளைச்சாவு நிலையில் இருந்த 32 வயதான ஹரிஷ் ராணாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகளை விலக்கிக் கொள்ள இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது என்ற நிலையில் இது இந்தியாவில் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் செயலற்ற கருணைக்கொலை அமலாக்கமாகும்.
  • நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ சிகிச்சையை விலக்கிக் கொள்ள அனுமதி அளித்தது.
  • கண்ணியமான மற்றும் நிம்மதியான மரணத்தை உறுதி செய்யும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.
  • நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுக்கள், அவரது உடல்நிலை குணப் படுத்த முடியாதது என்றும் குணமடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் முடிவு செய்தன.
  • கருணைக் கொலை (Passive Euthanasia) என்பது உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துவதைக் குறிக்கிறது, அதேசமயம் வலி இல்லாத கொலை (Active Euthanasia) என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் சட்டவிரோதமானது.
  • இந்திய அரசியலமைப்பின் 21வது சரத்து, கண்ணியத்துடன் இறக்கும் உரிமையை உள்ளடக்கியது என்று நீதிமன்றம் விளக்குகிறது.
  • அருணா ஷான்பாக் வழக்கு மற்றும் Common Cause Vs இந்திய ஒன்றியம் போன்ற முந்தைய தீர்ப்புகள் இந்தியாவில் கருணைக் கொலைக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்