முதன்முறையாக கருந்துளை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது “போவேஹி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பெயரானது ஹவாய் சொல்லான “குமுலிப்போ” என்பவற்றிலிருந்து புகழ்பெற்ற ஹவாய் மொழிப் பேராசிரியரான லாரி கிமுரா என்பவரால் வழங்கப்பட்டது.
இது 54 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள மிகப்பெரிய பால்வழி அண்டமான மெசியர் 87-ன் மையத்தில் அமைந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் நிகல்வெல்லைத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி (Event Horizon Telescope) கருந்துளையின் புகைப்படத்தைப் பெற்றுள்ளனர்.
நிகல்வெல்லை தொலைநோக்கி
நிகல்வெல்லைத் தொலைநோக்கி (EHT - Event Horizon Telescope) என்பது சர்வதேச கூட்டுமுயற்சியின் மூலம் பூமியில் அமைந்த 8 ரேடியோ தொலைநோக்கிகளின் ஒரு தொகுப்பாகும்.
EHT ஆனது உலகம் முழுவதும் உள்ள 8 தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து, இணைப்பு ஏற்படுத்தும் ஒரு முறையான மிகத் தொலைவு அடிப்படை எல்லை கொண்ட குறுக்கீட்டு ஒளி அளவியலைப் பயன்படுத்தியது.
இந்த ஒன்றிணைக்கப்பட்ட தொலைநோக்கிகள் இணைந்து முன்னிகழ்வற்ற உணர்திறன் மற்றும் தெளிவுத் திறனுடன் கூடிய பூமி போன்ற ஒரு மெய்நிகர் தொலைநோக்கியை உருவாக்கின.
EHT தொலைநோக்கிகளின் தொகுப்பு.
Atacama Large Millimeter Array
James Clerk Maxwell Telescope
Atacama Pathfinder Experiment
Large Millimeter Telescope
Heinrich Hertz Submillimetre Telescope
South Pole Telescope
IRAM 30m telescope
Sub-Millimeter Array
கருந்துளைகள்
கருந்துளை என்பது அதிக அளவிலான ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ள விண்வெளியின் ஒரு பகுதியாகும். இதிலிருந்து எந்தவொரு பொருளும் தப்பித்துச் செல்ல முடியாது.
ஒளி கூட கருந்துளைக்குள் சென்ற பின்பு தப்பித்துச் செல்ல முடியாது.
பல நட்சத்திரங்களின் வாழ்நாள் முடிவின்போது கருந்துளைகள் உருவாகின்றன.