TNPSC Thervupettagam

கருப்பு கழுத்து கொக்கு எண்ணிக்கை 2026

November 22 , 2026 8 days 132 0
  • லடாக்கில் கருப்பு கழுத்து கொக்குகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 87 ஆக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 108 ஆக அதிகரித்துள்ளது.
  • சாங்தாங் (Changthang) பகுதி கருப்பு கழுத்து கொக்குகளின் முக்கியமான இனப்பெருக்க வாழ்விடமாகும்.
  • சுஷுல், சோ கார், கார்க்யாம் மற்றும் கோர்சோக் ஆகிய இடங்களில் மொத்தமாக 60 கொக்குகள் பதிவாகியுள்ளன, இது மொத்த எண்ணிக்கையில் தோராயமாக 56% ஆகும்.
  • பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒன்றியப் பிரதேச நிர்வாகத்தால் முதல் முறையாகக் கருப்பு கழுத்து கொக்கு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
  • கருப்பு கழுத்து கொக்கு (குரூஸ் நிக்ரிகோலிஸ்) IUCN செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாகப் (Near Threatened) பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இது லடாக்கின் மாநிலப் பறவையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்