கரும்பிற்கு இதுவரை இல்லாத அளவிலான நியாய மற்றும் இலாப விலை
August 28 , 2021 1454 days 573 0
கரும்பு விவசாயிகளுக்காக இதுவரை இல்லாத அளவில் அதிகமான நியாய & இலாப விலையினை (Fair & Renumerative Price – FRP) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரும்பிற்கான FRP ஆனது 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ.290 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
இது 10% மீள்வின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது.
இதில் மீள்வானது 9.5% என்ற அளவிற்குக் குறைவாக இருந்தால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.275 என்ற விலையில் FRP ஆனது வழங்கப்படும்.
அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான சந்தைப்படுத்துதல் ஆண்டிற்கு FRP உயர்த்தப் பட்டுள்ளது.
FRP என்பது விவசாயிகளிடமிருந்து சர்க்கரை ஆலைகளால் வாங்கப்படும் கரும்பிற்கான குறைந்தபட்ச விலையாகும்.
இந்த விலையானது வேளாண் செலவினம் மற்றும் விலைகள் மீதான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசினால் நிர்ணயிக்கப்படுகிறது.