கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் 2025
November 14 , 2025 14 hrs 0 min 8 0
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது, 2025 ஆம் ஆண்டு மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை (திருத்தம்) விதிகளை அறிவித்தது.
1994 ஆம் ஆண்டு மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் கீழ் இந்த விதிகள் வெளியிடப்பட்டன.
இந்தத் திருத்தமானது, தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை (NOTP) வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மையங்களுக்கு இனி கட்டாய மருத்துவ ஸ்பெகுலர் உபகரணங்கள் தேவையில்லை.
இந்த மாற்றம் ஆனது கிராமப்புற மற்றும் சார்புநிலை நகர்ப்புறங்களில் உள்ள சிறிய கண் மருத்துவ சேவை மையங்களுக்கான செயல்பாட்டுச் சவால்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் கருவிழி தானம் மற்றும் மாற்றுச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும்.