TNPSC Thervupettagam

கருவுறுதல் விகிதம் - அந்தமான் மற்றும் நிக்கோபார்

June 11 , 2026 3 days 105 0
  • தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-6 (NFHS-6) இன் படி, இந்தியாவின் மிகக் குறைந்த மொத்த கருவுறுதல் விகிதத்தை (TFR) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பதிவு செய்துள்ளன.
  • இந்த ஒன்றியப் பிரதேசம் 0.9 என்ற அளவில் TFR-ஐ பதிவு செய்துள்ளது என்பதோடு இதுவே இந்தியாவில் மிகக் குறைவான பதிவாகும்.
  • பதிலீட்டு அளவிலான கருவுறுதல் விகிதம் ஆன 2.1 என்பது ஒரு நிலையான மக்கள் தொகையை பராமரிக்க தேவையான அளவாகும்.
  • அந்தமான் மற்றும் நிக்கோபாரில் மொத்த கருவுறுதல் விகிதமானது (TFR) NFHS-4 இல் 1.4 ஆக இருந்த நிலையில், NFHS-6 இல் 0.9 ஆகக் குறைந்துள்ளது.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பங்கு 5.3% இல் இருந்து 3.7% ஆகக் குறைந்து உள்ள அதே வேளையில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் மக்கள் தொகை 12.6% ஆக அதிகரித்துள்ளது.
  • 2-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பாலர் பள்ளி வருகை விகிதமானது 88.5% இல் இருந்து 66.2% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்