நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வக அமைப்பானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று சூரியனில் 5,00,000 கிலோமீட்டர் அகலமுள்ள வண்ணத்துப்பூச்சி வடிவ கரோனா துளையைப் புகைப்படம் எடுத்தது.
கரோனா துளைகள் என்பது சூரியனின் காந்தப் புலங்கள் திறக்கப்பட்டு, சூரியக் காற்று விண்வெளியில் வெளியேற அனுமதிக்கின்ற பகுதியாகும்.
இந்த கரோனா துளையிலிருந்து வரும் சூரியக் காற்று 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதியன்று பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இந்த நிகழ்வின் நேரம் சம இரவு பகல் நாளிற்கு/உத்தராயணத்திற்கு அருகில் இருப்பது ரஸ்ஸல்-மெக்பெரான் விளைவு காரணமாக புவி காந்த ஆபத்தை அதிகரிக்கிறது.
இந்த சூரியப் புயல்கள் செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் பூமியில் உள்ள பிற தொழில்நுட்ப அமைப்புகளைப் பாதிக்கக்கூடும்.