TNPSC Thervupettagam

கரோ சம்பவ் - பொதி கட்டுதலின் கழிவு மேலாண்மை

September 24 , 2019 2051 days 759 0
  • சந்தையில் முன்னணியில் உள்ள நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களான கோகோ கோலா இந்தியா, பெப்சிகோ இந்தியா மற்றும் பிஸ்லெரி போன்ற நிறுவனங்கள் நாட்டில் இதே வகையைச் சேர்ந்த முதன்முறையாக பொதி கட்டுதலின் கழிவு மேலாண்மை என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • இந்தத் திட்டம் கரோ சம்பவ் என்று அழைக்கப்படுகின்றது.
  • நுகர்வோர்கள் பொதியில் உள்ள பொருள்களைப் பயன்படுத்திய பின்னர் அந்த கழிவுப் பொதிகளைச் சேகரிப்பதற்கும் பொருள்களின் மறுசுழற்சி செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் முறையான ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதில் இது கவனம் செலுத்த இருக்கின்றது.
  • கரோ சம்பவ் என்பது ஒரு தயாரிப்பாளர் தலைமையிலான மற்றும் அந்தத் தயாரிப்பு நிறுவனங்களால்  செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இது 2025 ஆம் ஆண்டிற்குள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொதிகளின் கழிவுப் பொருட்கள் நிலப்பரப்பில் கொட்டப்படாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஏறத்தாழ 90 சதவீத பாலி எத்திலீன் டெரிப்தாலேட் புட்டிகள் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் 200 மில்லி லிட்டர் அளவுள்ள புட்டிகளைத் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தக் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்