TNPSC Thervupettagam

கர்த்தவ்ய பவன் பகுதி

July 24 , 2026 3 days 13 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், சென்ட்ரல் விஸ்டா (எழில் முற்றம்) மறுவடிவமைப்புப் பகுதியை 'கர்த்தவ்ய பவன் வளாகம்' அல்லது 'கர்த்தவ்ய பவன் பகுதி' என்று குறிப்பிட வேண்டும் என்று கூறினார்.
  • 'சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரை இனி பயன்படுத்தக் கூடாது.
  • பல கர்த்தவ்ய பவன்கள், கர்த்தவ்ய மார்க் மற்றும் இப்பகுதியில் அமையவிருக்கும் எதிர்கால அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு வளாகமும் 'கர்த்தவ்ய பவன் பகுதி' என்றே அழைக்கப்படும்.
  • 2022-ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்டிரபதி பவனிலிருந்து இந்தியா கேட் வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள ராஜ்பாத் சாலையை, கர்த்தவ்ய பாத் என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றினார்.
  • அதேபோல், பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் அமைந்துள்ள புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்தம்' எனப் பெயரிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்