கர்நாடகாவில் நீண்ட காலம் பதவி வகித்த முதலமைச்சர் - சித்தராமையா
June 5 , 2026 9 days 62 0
கர்நாடகாவின் 18வது முதலமைச்சரான சித்தராமையா, மாநில வரலாற்றில் மிக நீண்ட கூட்டுப் பதவிக்காலத்தைக் கொண்ட முதலமைச்சர் என்ற சாதனையை இப்போது படைத்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு டி. தேவராஜ் அர்ஸ் வசம் இருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இவர் 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2023 ஆம் ஆண்டு முதலும் கர்நாடக முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மொத்தப் பதவிக்காலம் 3,048 நாட்களைக் கடந்துள்ளது, இது 1956 ஆம் ஆண்டில் மாநிலம் உருவானதில் இருந்து எந்தவொரு கர்நாடக முதலமைச்சரும் வகிக்காத மிக நீண்ட பதவிக்காலமாகும்.
இரண்டு தனித்தனி பதவிக் காலங்கள் மூலம் இந்த சாதனையை எட்டிய முதல் கர்நாடக முதலமைச்சர் இவராவார்.