கர்நாடகா நல் உதவிபுரிபவர்களுக்கான பாதுகாப்பு மசோதா 2016
October 2 , 2018 2506 days 771 0
கர்நாடகா நல் உதவிபுரிபவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் (அவசர கால சூழ்நிலைகளில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள்) மசோதா 2016-க்கு அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால் கர்நாடகா மாநிலமானது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொன்னான நேரத்திற்குள் அவசரகால மருத்துவ உதவி வழங்கும் நல் உதவிபுரிபவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கிய முதல் மாநிலமாக ஆகியுள்ளது.
பொன்னான நேரம் என்பது அதிர்ச்சிகரமான காயம்பட்டவருக்கு அவசரகால மருத்துவ உதவி தேவைப்படுகின்ற முதல் ஒரு மணி நேரத்தின் மருத்துவத் துறை சொல் ஆகும்.
இந்தச் சட்டத்தின் கீழ் கர்நாடக அரசானது உரிய நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல் உதவிபுரிபவர்களுக்கு நிதியுதவியை வழங்கும்.