TNPSC Thervupettagam

கர்ப்பக் கால வலிப்புத் தாக்கத்திற்கு முந்தைய சோதனைக்கான உயிரி உணர்வு கருவி

July 19 , 2025 2 days 25 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவானது, கர்ப்பிணிப் பெண்களில் கர்ப்பக் கால வலிப்பு தாக்கத்திற்கு முந்தைய ஒரு முக்கியச் சோதனைக்கான உயிரி உணர்வு கருவியினை உருவாக்கி  வருகிறது.
  • தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஒரு பெரும் மாற்றாக ஒளியிழை உணர்வு கருவி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நோயாளியின் படுக்கைக்கு மிக அருகிலேயே இந்தச் சோதனையை மேற்கொள்ளும் வகையில் இது உருவாக்கியுள்ளது.
  • குறைந்த விலையிலான நோயறிதல் சோதனையானது புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற பிற நோய்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு திறனைக் கொண்டு உள்ளது.
  • சிகிச்சை அளிக்கப்படா விட்டால் கர்ப்பக் கால வலிப்புத் தாக்கத்திற்கு வழிவகுக்கும் அதற்கு முந்தைய நிலையானது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையாகும்.
  • கர்ப்பக் கால வலிப்புத் தாக்கம்/எக்லாம்ப்சியா ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
  • கர்ப்பக் கால வலிப்புத் தாக்கத்திற்கு முந்தைய ஒரு நிலையைக் கண்டறியவதற்கான தற்போதைய முறைகள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் மற்றும் அதிகளவிலான உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்