சூழலியல் அமைப்பை மீட்டெடுக்க கலபகோஸ் தேசியப் பூங்காவானது 158 கலப்பின ராட்சத ஆமைகளை ஃப்ளோரியானா தீவில் வெளியிட்டது.
19 ஆம் நூற்றாண்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட செலோனாய்டிஸ் நைகரின் 40–80% டிஎன்ஏவை இந்த ஆமைகள் கொண்டுள்ளன.
கலாபகோஸ் தீவுகள் பசிபிக் பெருங்கடலில், ஈக்வடாருக்கு மேற்கே சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன என்பதோடு மேலும் அவை எரிமலையின் செயல் பாடுகளால் உருவாக்கப்பட்டன.
இந்தத் தீவுகள் சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை ஊக்குவித்துடன் 1978 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகவும் அறிவிக்கப் பட்டன.
ராட்சத ஆமைகள் விதைகளைப் பரப்புதல், தாவரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிற உயிரினங்களுக்கு வாழ்விடங்களை உருவாக்குவதால் அவை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
செலோனாய்டிஸ் இனமானது பொதுவாக IUCN ஆல் அருகி வரும் இனமாக அல்லது மிகவும் அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.