கலாச்சாரப் பாரம்பரியப் பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் ஆசியா - பசிபிக் விருதுகள்
October 16 , 2019 2111 days 729 0
மும்பையின் பாரம்பரியப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரமாக, மூன்று நகரங்களில் உள்ள அடையாளச் சின்னங்கள் இந்த ஆண்டின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் ஆசியா - பசிபிக் விருதுகளை வென்றுள்ளன.
அவை ஃப்ளோரா பவுண்டெயின், பைக்குல்லாவில் உள்ள குளோரியா தேவாலயம் மற்றும் கலா கோதாவில் உள்ள கெனெசெத் எலியாஹூ ஜெப ஆலயம் ஆகியனவாகும்.
பாரம்பரிய அமைப்புகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக மீட்டெடுத்துப் பாதுகாக்கும் தனி நபர்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கின்றது.
அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் உள்ள விக்ரம் சாராபாய் நூலகமானது அதன் மறுசீரமைப்புக் கட்டிடக் கலைஞரான பிருந்தாவிற்காக “தனித்துவ விருதினைப்” பெற்றுள்ளது.