இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தால் (GSI) கலிஞ்சர் குன்றுதேசிய புவிசார் பாரம்பரியத் தளமாகஅறிவிக்கப்பட்டது.
விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள இந்தத் தளம், வெவ்வேறு புவியியல் காலங்களின் பாறை அடுக்குகள் சந்திக்கும் அரிதானஎபார்ச்சியன் முரண்பாட்டினை வெளிப்படுத்துகிறது.
இது 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பந்தேல்கண்ட் கிரானைட் மற்றும் அதன் மேல் 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையான கைமூர் மணற்பாறையைக் கொண்டு உள்ளது என்ற நிலையில் இது பூமியின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
இயற்கைப் பாதுகாப்புக்காக மலைப்பாங்கான ஒரு நிலப்பரப்பைப் பயன்படுத்திய கலிஞ்சர் கோட்டையானது உள்ளூரில் கிடைக்கும் கற்களைப் பயன்படுத்தி கட்டப் பட்ட நிலையில் இது ஒரு வலுவான புவிசார்-கலாச்சார தொடர்பைக் காட்டுகிறது.
சமுத்திர மந்தன் புராணத்துடன் தொடர்புடைய நீலகண்ட மகாதேவர் கோயில் மற்றும் பௌத்த நூல்களில் உள்ள குறிப்புகள் உள்ளிட்ட வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தை இந்தத் தளம் கொண்டுள்ளது.