நடிகர்கள் சாய் பல்லவி, S.J. சூர்யா, விக்ரம் பிரபு, K. மணிகண்டன், ஜெயா V.C. குக நாதன் மற்றும் M. ஜார்ஜ் மரியன் ஆகியோர் 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் விவேகா, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கலை இயக்குநர் M. ஜெயக்குமார், நடன இயக்குநர் A. சந்தோஷ் குமார், சண்டை பயிற்சியாளர் (ஸ்டண்ட் மாஸ்டர்) சூப்பர் சுப்பராயன் உள்ளிட்டோர் இந்த விருதினைப் பெற உள்ள பிற நபர்கள் ஆவர்.
மூத்த பின்னணிப் பாடகர் K.J. யேசுதாஸ் இசைக்கான M.S. சுப்புலட்சுமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலக்கியத்திற்கான பாரதியார் விருது N. முருகேச பாண்டியனுக்கு வழங்கப்பட உள்ளது.
நடனத்திற்கான பாலசரஸ்வதி விருது பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாளுக்கு வழங்கப்பட உள்ளது.
சங்கங்கள் பிரிவின் கீழ் சென்னைத் தமிழ் இசை சங்கம் இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
நாடகக் குழு பிரிவின் கீழ் கலைமாமணி M.R. முத்துசாமி நினைவு நாடகக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இலக்கியம், இசை, நடனம், நாடகம், திரைத் துறை மற்றும் பாரம்பரியக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 90 கலைஞர்கள் இந்த விருதுகளைப் பெறுவார்கள்.