அருணாச்சல பிரதேசத்தில் 1,200 மெகாவாட் (MW) திறன் கொண்ட கலை-II நீர்மின் நிலையத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையம் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள லோஹித் ஆற்றில் கட்டமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை WAPCOS லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது.
ஆனால், இந்த நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில் காணப்படும் வெண்ணாரை பறவை பற்றி EIA குறிப்பிடவில்லை.
வெண்ணாரை பறவைகள் ஆனது IUCN அமைப்பினால் மிக அருகி வரும் இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது.
இந்த இனம் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சட்டப் பூர்வமாகப் பாதுகாக்கப்படுகிறது.