கல்லீரல் அழற்சிக்கு உட்கொள்ளும் மருந்துகள் – ஹரியானா
November 13 , 2017 2791 days 1016 0
ஹெபடைடிஸ்-சி (Hepatitis-C) வகை கல்லீரல் அழற்சி நோய்க்கு அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஹெபடைடிஸ்-சி நோயாளிகளுக்கு வாய்வழி உட்கொள்ளத்தக்க மருந்துகளைக் (Oral Medicine) கொண்டு சிகிச்சை அளிக்கவல்ல நாட்டின் முதல் மாநிலமாக ஹரியானா உருவாகியுள்ளது..
இதற்காக முதல் முறையாக ஹரியானா மாநிலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வாய்மொழியாக உட்கொள்ளும் ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.
மாவட்ட அளவில் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த நிரந்தர குடியிருப்பு வாசிகளுக்கு இம்மருந்து இலவசமாக வழங்கப்படும்.
கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலில் உள்ள செல்கள் வீக்கத்துடன் காணப்படும் நிலை ஆகும். நோய் தொற்றின் வகையைப் பொறுத்து உடலில் உண்டாகும் சிக்கல்கள் வேறுபடும்.
ஹெபடைடிஸ் வகை வைரஸ்களால் இந்நோய் ஏற்படுகிறது.
ஒவ்வொரு கல்லீரல் அலற்சி வகை நோயும் வெவ்வேறு ஹெபடைடிஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. கல்லீரல் அழற்சி / ஹெபடைடிஸ் ஐந்து வகைப்படும். அவை,