TNPSC Thervupettagam

கல்லீரல் நோய்க்கான முதல் AI கருவி

December 17 , 2025 15 hrs 0 min 20 0
  • AIM-NASH என்பது கடுமையான கொழுப்பு கல்லீரல் நோயை மதிப்பிடுவதற்கு என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) தகுதி பெற்ற முதல் AI கருவி ஆகும்.
  • வளர்சிதை மாற்றச் செயலிழப்பு தொடர்பான மது பழக்கம் சாரா கொழுப்பு ஈரலழற்சி/ஸ்டீட்டோஹெபடைடிஸ் (MASH) பாதிப்பில் கொழுப்பு குவிப்பு, வீக்கம் மற்றும் வடு ஆகியவற்றைக் கண்டறிய கல்லீரல் பயாப்ஸி படங்களை இது பகுப்பாய்வு செய்கிறது.
  • இறுதி நோயறிதலுக்காக மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட தரப்படுத்தப் பட்ட மதிப்புகளை உருவாக்க இந்தக் கருவி உள்ளார்ந்த கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.
  • FDA தகுதி ஆனது MASH மருத்துவப் பரிசோதனைகளை துரிதப்படுத்தும், சோதனை காலக்கெடுவைக் குறைக்கும் மற்றும் பல மனித ஆய்வுகளை நம்பியிருப்பதைக் குறைக்கும்.
  • AIM-NASH ஆனது துல்லியத்திற்காக மனித மேற்பார்வையைப் பேணும் அதே வேளையில் மருந்து உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பங்கை நிரூபிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்