அரசாங்கமானது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகை திட்டத்தின் (CSSS) கீழ், பிரதான் மந்திரி உச்சதர் சிக்சா புரோட்சஹான் (PM-USP) என்ற உதவித்தொகையினை வழங்குகிறது.
இந்தத் திட்டமானது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த புத்திக் கூர்மை மிக்க மாணவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்புகளுக்கு பணம் செலுத்த உதவுகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது 2025-26 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகை திட்டத்தினை தேசிய உதவித் தொகை தளத்தில் (scholarships.gov.in) அறிவித்து உள்ளது.
மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
இந்த உதவித் தொகையானது ஒவ்வொரு மாநிலத்திலும் 18 முதல் 25 வயதுடைய மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே என்று பிரிக்கப் படுகிறது.
அறிவியல், வணிகம் மற்றும் கலைத் துறை சார்ந்த மாணவர்களுக்கு 3:2:1 என்ற ஒரு விகிதத்தில் உதவித்தொகை பகிரப்படும்.
பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.
முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய் வழங்கப்படும்.
5 ஆண்டு தொழில்முறைப் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் ஆண்டிற்கு 20,000 ரூபாய் வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையானது நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் மாணவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.
மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 4.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.