2018 கல்வியின் நிலை பற்றிய வருடாந்திர அறிக்கை (Annual Status of Education Report - ASER) என்பது 2006-ம் ஆண்டிலிருந்து பிரதாம் என்ற அரசு சாரா அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.
இவ்வறிக்கை எட்டாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் ஒரு எண் கணிதப் பிரிவுத் தீர்வினை சரியாக அறிய முடியாமலும் நான்கில் ஒரு பகுதி மாணவர்கள் ஆரம்ப நிலைக் கல்வி தரத்தில் உள்ள வாக்கியங்களை படிக்க முடியாமலும் உள்ளதாக தெரிவிக்கின்றது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் கீழ்மட்ட ஆரம்ப நிலைக் கல்வி மாணவர்களின் படிக்கும் திறன் மற்றும் கணிதத் திறன்களில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் 8-ம் வகுப்பு மாணவர்களின் திறன்கள் உண்மையில் ஒரு தொய்வைக் கண்டிருக்கின்றன.