TNPSC Thervupettagam

கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர் அடையாளங்கள்

April 20 , 2025 11 days 87 0
  • 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் இனி அரசு அல்லது தனியார் நடத்தும்  எந்தவொரு பள்ளியாகவோ அல்லது கல்லூரியாகவோ இருந்தாலும், சாதிப் பெயர் அடையாளங்களைக் கொண்டிருக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம், திருச்செங்கோடு வட்ட கொங்கு வேளாளர் சங்கம் மற்றும் Poor Educational Fund ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த பல்வேறு நீதிப் பேராணை மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்டப் பள்ளி நிர்வாகங்கள் சாதி அடையாளங்களைக் கைவிடத் தவறினால், அவற்றின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் இருந்து, ‘கள்ளர் சீரமைப்பு’ மற்றும் ‘ஆதி திராவிடர் நலம்’ போன்ற சொற்களை நீக்கி, ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தவும் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • சாதி அமைப்பை நிலை நிறுத்தும் சங்கங்கள், அத்தகையச் சங்கங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக என்று அரசியலமைப்பின் 226வது சரத்தின் கீழ் நீதிப் பேராணை அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.
  • சாதிய அமைப்பானது ஒரு மதத்தோடு மட்டும் நின்று விடாமல் கிட்டத்தட்ட அனைத்து மதங்களிலும் பரவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்