தமிழக அரசானது, K. காமராஜர் அவர்களின் பிறந்த நாளை (ஜூலை 15) 'கல்வி தினம்' அல்லது 'கல்வி மேம்பாட்டுத் தினம்' ஆக கொண்டாடுகிறது.
2006 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியன்று சென்னை மாகாணத்தின் விருதுபட்டியில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
அவர் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 முதல் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி வரை சென்னை முதல்வராகப் பணியாற்றினார்.