உலகப் பொருளாதார மன்றம், யுனிசெப் மற்றும் YuWaah (Generation Unlimited India) ஆகியவை இணைந்து கல்வி 4.0 இந்தியா அறிக்கையை வெளியிட்டன.
இந்தியாவின் கல்வித் துறையில் கற்றல் பயன்பாடுகளை மேம்படுத்துவதிலும், அவற்றிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதிலும் தொழில்துறைப் புரட்சி 4.0 தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் இது கவனம் செலுத்துகிறது.
இந்த அறிக்கையின்படி, வேகமாக மாறிவரும் வேலைவாய்ப்புச் சந்தையில் மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் செயல்முறையே பள்ளியிலிருந்துப் பணிக்கு மாற்றுதல் என்பதாகும்.
முறையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இல்லாததால், இந்தியாவில் பள்ளியில் இருந்து பணிக்கு மாற்றுதல் திட்டம் குறிப்பிடத்தக்கச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.