கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கும் விதிகளில் திருத்தம் - MNRE
July 4 , 2025 2 days 34 0
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது, கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்குவது (WtE) குறித்த அதன் வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது.
திட்டச் செயல்திறனை மேம்படுத்தவும் நிதி உதவியை எளிதாக்கவும் தேசிய உயிரி ஆற்றல் திட்டத்தின் கீழ் இது வெளியிடப் பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் (MSME), அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG), உயிரி எரிவாயு மற்றும் கழிவுகளிலிருந்து மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ஆலைகளை உருவாக்குவதை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.