கழிவுநீர் சாக்கடைக் குழாய் சுத்திகரிப்பு எந்திரங்கள்
February 28 , 2023 1068 days 521 0
கேரள அரசானது, கழிவுநீர் சாக்கடை சுத்தம் செய்வதற்காக பாண்டிகூட் என்ற கழிவு நீர் சாக்கடை சுத்திகரிப்பு எந்திரத்தினை அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம் எந்திரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து கழிவுநீர் சாக்கடை குழாய்களையும் சுத்தம் செய்யும் இந்தியாவின் முதல் மாநிலமாக இது திகழ்கிறது.
பாண்டிகூட் உலகின் முதல் கழிவுநீர் சாக்கடைக் குழாய் சுத்திகரிப்பு எந்திரமாகும்.
கேரளாவில் உள்ள ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பாண்டிகூட், சமீபத்தில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஹடில் குளோபல் விருது என்ற விழாவில் 'கேரளத்தின் கௌரவம்' என்ற விருதைப் பெற்றுள்ளது.
பாண்டிகூட் எந்திரங்கள் தற்போது இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள சில நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.