TNPSC Thervupettagam

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - ஓக்லா

April 19 , 2022 1203 days 497 0
  • ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில், டெல்லியில் கட்டுமானத்தில் உள்ள, ஒரு நாளைக்கு 564 மில்லியன் லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யும் ஓக்லா கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை ஆய்வு செய்தார்.
  • இது யமுனையைச் சுத்தம் செய்யும் பணியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த ஆலை ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலையாக இருக்கும்
  • இது கழிவுநீரில் இருந்து மாசுபட்டப் பொருட்களை  அகற்றி, அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலில் வெளியேற்றுவதற்கு ஏற்ற ஒரு கழிவுநீரை உற்பத்தி செய்வதை அல்லது அதனை மறுபயன்பாட்டிற்கு உபயோகித்து, அதன் மூலம் நீர் மாசுபடுவதைத் தடுக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்