கழுகுகள் குறித்த விழிப்புணர்வு தினம் 2025 - செப்டம்பர் 06
September 12 , 2025 10 days 37 0
இது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று நினைவு கூரப்படுகிறது.
கழுகுகளின் (பிணந்தின்னிக் கழுகு) வளங்காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக உலகளவில் கழுகுகளின் எண்ணிக்கை பேரழிவு தரும் வகையிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது.
டைக்ளோஃபெனாக், கீட்டோபுரோஃபென் மற்றும் அசெக்ளோஃபெனாக் போன்ற கால்நடை மருந்துகளின் பரவலான பயன்பாடு கழுகுகளின் எண்ணிக்கையில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.